[X] Close

மாட்டின் வயிற்றில் 80கிலோ பாலிதீன் கழிவுகள்

Doctors-remove-80kg-of-polythene-waste-from-cow---s-stomach-after-3-hour-operationDoctors-remove-80kg-of-polythene-waste-from-cow---s-stomach-after-3-hour-operation

பீகாரில் 6வயது நிரம்பிய மாட்டின் வயிற்றில் இருந்து 80கிலோ பாலிதீன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் மாட்டின் வயிற்றில் இருந்த சுமார் 80 கிலோ பாலிதீன் கழிவுகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். 6 வயதான அந்த மாட்டிற்கு சுமார் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்து இந்த கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.

இது குறித்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் கூறுகையில், என்னுடைய 13 வருட அனுபவத்தில் இவ்வளவு பாலிதீன் கழிவுகளை ஒரு மாட்டின் வயிற்றில் இருந்து அகற்றியதில்லை. இதுதான் முதல்முறை எனத் தெரிவித்தார்.


Advertisement

நாம் பயன்படுத்தும் பாலிதீன் பைகள் இதுபோன்ற கால்நடைகளுக்கு எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதை நாம் சிந்திக்க வேண்டும். நகர்ப்புறங்களில் அன்றாடம் நாம் சாலைகளில் செல்லும் போது ஏராளமான கால்நடைகள் தங்களுக்கான உணவுகளை குப்பைத்தொட்டியில் தேடி கொண்டிருக்கும். குப்பைத்தொட்டிகளில் கிடைக்கும் உணவுகளை தான் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகள் உணவாக எடுத்துக்கொள்கின்றன. அந்த குப்பைத்தொட்டியில் தான் நமது வீட்டில் இருக்கும் சமையல் கழிவுகள் அழுகிப்போன பழங்கள், காய்கறிகள் போண்றவற்றை பாலிதீன் பைகளில் கொண்டுபோய் கொட்டுகிறோம். 

கால்நடைகள் எவற்றையும் தனித்தனியாக பிரித்து எல்லாம் உணவாக எடுத்துக்கொள்ளாது.அவை அந்த பாலீதின்  பைகளோடு அப்படியே தனக்கான உணவை உட்கொள்ளும். பொதுவாக மாடுகள் உணவுகளை அப்படியே விழுங்கி வயிற்றுக்கு அனுப்பும். பின்பு அதனை வாயிற்கு கொண்டு வந்து மெல்ல மெல்ல அசைப்போடும். நன்கு மெல்லப்பட்ட பாலிதீன்கள் வயிற்றில் அப்படியே தங்கிவிடுகின்றன. இதனால் இவ்வாறு நடப்பதினால் மாட்டிற்கு பசியின்மை ஏற்படும். வயற்றில் இருக்கும் பாலீதின்கள் மாட்டிற்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.

வீட்டில் வளர்க்கப்படும் மாடுகளையே தனியாக மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். தனியாக மேய்ச்சலில் ஈடுபடும் போது பாலிதீன் பைகளை உட்கொள்ள நேரும் என எச்சரிக்கின்றனர். வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகள் சரியாக உணவு எடுத்துக்கொள்ளாவிட்டால் கால்நடை மருத்துவரிடம் காண்பிக்கும் போது அந்த பிரச்னைகள் சரிசெய்யப்படுகின்றன.நாம் பயன்படுத்தும் பாலிதீன்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதோடு இதுபோன்ற கால்நடைகளுக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close