Published : 08,Feb 2018 08:25 AM

ரவுடி பினுவை பிடிக்க சேலம் விரைந்தது தனிப்படை

special-team-rushed-salem-for-catch-rowdy-Pinu

சென்னை மலையம்பாக்கத்தில் பிரமாண்டமாக பிறந்தநாளை கொண்டாடிய ரவுடி பினுவை பிடிக்க தனிப்படை போலீசார் சேலம் விரைந்துள்ளனர். 

முக்கிய ரவுடிகளான பினு, கனகராஜ், விக்னேஷ் ஆகிய மூன்று பேரும் சேலத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் சேலம் விரைந்துள்ளனர். ரவுடி பினுவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது, சுற்றி வளைத்த காவல்துறையினர் 75 ரவுடிகளைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 60 விலை உயர்ந்த கைப்பேசிகள், 17 அரிவாள்கள், 45 இருசக்கர வாகனங்கள், 7 சொகுசு கார்கள் மற்றும் ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்நிலையில், 3 ரவுடிகளிடம் பத்திரத்தில் எழுதிவாங்கிக் கொண்டும், ஒருவருக்கு ஜாமின் வழங்கியும் வெளியில் விடப்பட்டுள்‌ளனர். மற்ற 71 ‌ரவுடிகளும் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். 

இதற்கிடையில், ரவுடிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களின் உரையாடல்களை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதனடிப்படையில் தலைமறைவாக உள்ள ரவுடி பினு உள்ளிட்ட மூவரைத் தேடி தனிப்படை காவல்துறையினர் சேலம் விரைந்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்