Published : 03,Feb 2018 05:53 AM

புதுச்சேரி கனகம் ஏரியில் படகுப்போக்குவரத்து

Kiranbedi-Boat-Transport-Inaguration-Function

புதுச்சேரியை அடுத்த கதிர்காமத்தில் கனகம் ஏரியில் படகுப்போக்குவரத்தை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தொடங்கி வைத்தார். 

கதிர்காமத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அருகே உள்ள கனகம் ஏரியில் தூய்மைப்படுத்தும் பணிகளை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து ஆய்வு செய்து வந்தார். இப்பணிகள் முடிக்கப்பட்டு இன்று படகு சவாரி போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதனை ஆளுநர் கிரண்பேடி, தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடியிடம் ஓரிரு தினங்களுக்கு முன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணமியுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கிரண்பேடி, வரும் 28ந்தேதி ஆரோவில் உதயதின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி புதுச்சேரி வருவதையொட்டி, செய்யப்படவுள்ள பாதுகாப்பு குறித்து முதல்வரிடம் ஆலோசித்ததாகவும், மேலும் புதுச்சேரி வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவை குறித்தும் விவாதித்தாகவும் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்