Published : 26,Jan 2018 12:45 PM

அண்ணா சாலையில் திடீர் 10 அடி பள்ளம்! ஏன்?

Chennai-Anna-Salai-Groove

சென்னை அண்ணா சாலையில், திடீரென 10 அடி பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகே, தடுப்புகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென 10 அடி பள்ளம் ஏற்பட்டது. இதனால் அங்கு சற்று நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார், அந்த வழியே வந்த வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி அனுப்பினர். இதை தொடர்ந்து அந்தப் பள்ளத்தை மூடும் பணியில் மெட்ரோ நிர்வாக ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பள்ளம் ஏன்? ஏற்பட்டது என அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இது தொடர்பாக கட்டிட அமைப்பு நிபுணர்கள், மெட்ரோ ரயில் பணி காரணமாக ஏற்பட்ட நில உட்கட்டமைப்பு சிதைவுகளும் இதற்கு ஒரு காரணம் என்கின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்