[X] Close

வரும் தேர்தல் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் : விஷால்

Vishal-said-about-Coming-Tamilnadu-Assembly-Election-and-Rajini--Kamal

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரும் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.

இந்தியா டுடே குழுமம் சார்பில் நடைபெறும் கருத்தரங்கில் நடிகர் விஷால் கலந்து கொண்டு தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து பேசினார். அப்போது "ரஜினி மற்றும் கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவதாக தாமதாக அறிவித்துள்ளனர். ஆனால் இந்த முடிவு மிகச்சரியான ஒன்றாகவே பார்க்க முடிகிறது. கமல் மற்றும் ரஜினி ஆகிய இருவரும் களத்தில் உள்ள நிலையில் மக்கள் யாருக்கு வாய்ப்பளிப்பார்கள் என கணிக்க முடியாத சூழல் உள்ளது. ஆனால் வரும் சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை எற்படுத்துவதாக அமைய போகிறது என்பது மட்டும் உறுதி” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய விஷால், “பல்வேறு சமூகம் சார்ந்த பிரச்னைகள் பற்றி பேசிவரும் நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழகத்தில் போட்டியிட வேண்டும். அவரின் பங்களிப்பு நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். ஆர்கே நகரில் எனது வேட்புமனுவை நிராகரித்து ஜனநாயக படுகொலை செய்தார்கள். ஆனால் அதுவே என்னை இன்னும் வலிமை ஆக்கியிருக்கிறது” என்றார். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close