[X] Close

மு.க.ஸ்டாலினை வாழ்த்தினார் கருணாநிதி..!

Karunanidhi-greets-MK-Stalin-on-his-65th-Birthday

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தமது பிறந்தநாளை ஒட்டி கட்சியின் தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தமது பிறந்தநாளை ஒட்டி தனது தந்தையும் கட்சித் தலைவருமான கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது கருணாநிதியிடம் “புதிய வரலாறு படைத்தேர் வரிசை.. 100 பேர்” என்ற மொழிபெயர்ப்பு நூலை பரிசாக மு.க.ஸ்டாலின் அளித்தார். இந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

உடல்நலக் குறைவால், காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் கருணாநிதி தற்போது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேந்ந்தெடுக்கப்பட்ட கூட்டத்திலும் சரி, அண்மையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசிப்பதற்காக நடைபெற்ற திமுக-வின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் சரி கருணாநிதி பங்கேற்கவில்லை. பொது நிகழ்ச்சிகளிலும் அவரை காணமுடியவில்லை. இதனால் கருணாநிதியின் உடல்நலம் குறித்து அவரது தொண்டர்கள் மத்தியில் மட்டுமில்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் பல்வேறு விதமான மாறுபட்ட கருத்துகள் நிலவி வந்தன. இந்நிலையில் தற்போது கருணாநிதியின் புகைப்படம் வெளியாகி உள்ளதால் தொண்டர்கள் மிகுந்த உற்சாசம் அடைந்துள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close