Published : 16,Jan 2018 05:25 AM
ஜல்லிக்கட்டில் பட்டையகிளப்பிய அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் என்ற காளை பரிசை வென்றது.
மதுரை அலங்காநல்லூரில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பாயும் காளைகளை, வீரத்துடன் காளையர்கள் பிடித்து வருகின்றனர். இந்த போட்டியை முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் நீண்ட நேரம் கண்டு ரசித்தனர். இந்த ஜல்லிக்கட்டில் அமைச்சர் விஜயபாஸ்கரின் 2 காளைகள் பங்கேற்றன. அதில் கொம்பன் என்ற காளை அசத்தலாக விளையாடி வீரர்களை சிதறடித்தது. அதனை யாரும் பிடிக்க முடியவில்லை என்பதால், பரிசையும் வென்றது.