[X] Close

 நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ்

Notice-to-actor-Dhanush

நடிகர் தனுஷை தனது மகன் எனக்கூறி வரும் கதிரேசன், அவருக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர், தங்களுடைய மகன் நடிகர் தனுஷ் எனக்கூறி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், தனுஷுக்கு கதிரேசன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதால் தனக்கு நீதி மறுக்கப்பட்டதாகவும், உங்கள் மீது ஏன் குற்றவியல் வழக்கு தொடரக்கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நோட்டீஸுக்கு 10 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படியும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close