சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மூன்றாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவங்களிலான தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதலாவது போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் தோல்வியை சந்தித்தது. பேட்ஸ்மேன்களின் தவறுதலான ஷாட் செலக்சன் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. மேலும் இந்திய அணியில் ரஹானேவுக்கு பதிலாக ரோஹித் சேர்க்கப்பட்டதும் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. இந்தப்போட்டியில் விராத் கோலியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை.முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 18 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் களமிறங்கிய கோலி 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி சில நிமிடங்கள் பொறுமையுடன் களத்தில் இருந்திருந்தால் அன்றைய ஆட்டம் முடிவடைந்திருக்கும். இந்த நேரத்தில் கோலியின் விக்கெட் இந்திய அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்பட்டது.இரண்டாவது இன்னிங்ஸில் சற்று தாக்குபிடித்த கோலி 28ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார்.
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஜொலிக்காததால் டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரநிலையில் கோலி ஒரு இடம் பின்தங்கியுள்ளார். ஆஷஸ் தொடரில் அசத்தி வரும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்திலும், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். கோலி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் தென்னாப்ரிக்க வீரர் ரபாடா முதலிடம் பிடித்துள்ளார்.
Loading More post
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
விராலிமலை: விஏஓ வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி - ஒருவர் கைது
பேராவூரணி அருகே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை கண்டெடுப்பு!
மாயமான பள்ளி மாணவி - காதல் கணவனுடன் மைசூரில் இருந்து மீட்பு
'Chessable Masters' தொடர்: ஒரு தவறான நகர்த்தலால் ஃபைனலில் பிரக்ஞானந்தா தோல்வி!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!