Published : 03,Jan 2018 09:48 AM

பாகிஸ்தான் இரட்டை வேடமிடுகிறது: அமெரிக்கா குற்றச்சாட்டு

America-Warning-Pakistan-for-Terrorist-Issue

அமெரிக்காவிடம் பாகிஸ்தான் இரட்டை வேடமிட்டிருக்கிறது என ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலே குற்றஞ்சாட்டியுள்ளார். 

ஆப்கானிஸ்தான் ‌எல்லைப் பகுதியில் தீவிரவாத தாக்குலில் அமெரிக்கப் படைகள் ஈடுபட்ட போது, பாகிஸ்தான் அமெரிக்கப் படைகளை தாக்கியுள்ளது. இதை அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் ஒரு போதும் ஏற்காது என அவர் எச்சரிக்கை விடுத்து‌ள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிராகப் பாகிஸ்தான் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அதற்காக பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே பாகிஸ்தானுக்கு வழங்குவதாக உறுதியளித்திருந்த சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்திருப்பதாக நிக்கி ஹேலே தெரிவித்துள்ளார்.‌ பாகிஸ்தான் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் அதிருப்தி தெரிவித்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் மீதான அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்