Published : 01,Jan 2018 04:25 PM
ராமகிருஷ்ண மடத்தில் ரஜினி

சென்னை ராமகிருஷ்ண மடத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றார்.
ஆன்மிக அரசியல் கட்சியாக தனது புதிய கட்சி செயல்படும் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். அதனையொட்டி அவர் இன்று தனது ரசிகர் மன்றத்திற்காக ஒரு வலைதளத்தை தொடங்கியுள்ளார். இதனையடுத்து அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்ற பெயரில் தனி ட்விட்டர் கணக்கையும் ஆரம்பித்துள்ளார். அவரது வலைதளத்தில் பாபாவின் கை முத்திரையும் அதில் நாகம் சுழன்று நிற்பதை போலவும் லோகோ இடம் பெற்றுள்ளது. இந்தச் செய்தியை அறிந்து அவரது வீட்டுக்கு முன்பாக புத்தாண்டையொட்டி திரட்ட ரசிகர்களை சந்தித்து அவர் வாழ்த்தை பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில் திடீரென்று அவர் சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு சென்று அங்குள்ள ஆன்மிக தலைவர் கெளதமானந்தாஜி மகராஜை சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு பற்றி எந்தச் செய்தியும் வெளியாகவில்லை. யாரும் எதிர்பாராத தருணத்தில் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.