[X] Close

சென்னை அருகே மின்சார ரயில் மீது மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து

electric-train-accident-near-chennai

சென்னை இரும்புலியூரில் மின்சார ரயில் மீது உயரழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூரில் உயரழுத்த மின்சார கம்பி, மின்சார ரயில் மீது அறுந்து விழுந்ததால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றம் அடைந்த மக்கள் அலறியடித்தபடி ரயிலில் இருந்து கீழிறங்கி ஓடினர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. அறுந்து விழுந்த மின்சார கம்பியை சீரமைக்க 2 மணி நேரத்திற்கும் மேலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.

ரயிலில் பயணித்த சுமார் 400 பயணிகள் ஆட்டோ பிடித்தும் பேருந்துகள் மூலமாகவும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்கின்றனர். மற்ற தண்டவாளங்களிலும் குறைவான அளவிற்கே ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். விபத்திற்கான காரணம் விசாரணைக்கே பின்னே தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close