[X] Close

மே.தீவுகளை வென்று டெஸ்ட் கோப்பையை கைப்பற்றியது நிஸி...

NZ-vs-WI-Test-Series--NZ-win-by-2-0-

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி வென்றுள்ளது.

நியூஸிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸை பேட்டிங்கில் தொடங்கிய நியூஸிலாந்து அணி, 373 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் 152 ரன்கள் முன்னிலையுடன் நியூஸிலாந்து 2வது இன்னிங்ஸை தொடங்கியது.  

இதையடுத்து 291 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்து நியூஸிலாந்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் டெய்லர் சதம் அடித்தார். பின்னர் 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என ஆட்டத்தை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, நியூஸிலாந்து வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 203 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 240 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் 2-0 என்ற கணக்கில் வென்றது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close