Published : 12,Dec 2017 08:40 AM

பேரறிவாளனை சிறையிலிருந்து விடுவிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

SC-refused-to-release-perarivalan

தற்போதைய சூழலில் பேரறிவாளனை சிறையிலிருந்து விடுவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

ராஜீவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தான் கொடுத்த வாக்குமூலத்தை சரியாக பதிவு செய்யாததாலேயே சிறைத் தண்டனையை அனுபவித்துவர நேர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது பேரறிவாளனை விடுதலை செய்ய சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வாதங்கள் முடிந்த பின் தீர்ப்பளித்த நீதிபதி, தற்போதைய சூழலில் பேரறிவாளனை சிறையிலிருந்து விடுவிக்க முடியாது என தீர்ப்பளித்தார். மேலும், சிபிஐ சிறப்புக்குழு விசாரணை அறிக்கையை பேரறிவாளன் தரப்பிற்கு அளிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்