Published : 12,Dec 2017 05:13 AM
குஜராத்தில் 2ஆம் கட்டத்தேர்தல்: பிரசாரம் இன்றுடன் நிறைவு

குஜராத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது.
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு, கடந்த 9ஆம் தேதி 82 இடங்களுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 68 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பரப்புரை இன்று மாலையுடன் முடிகிறது. இதையொட்டி பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டாம் கட்ட தேர்தல் களத்தில் 851 வேட்பாளர்கள் உள்ளனர். குஜராத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 18ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.