Published : 11,Dec 2017 03:56 PM

திருமண புகைப்படத்தை வெளியிட்டார் விராட் கோலி

Actress-Anushka-Sharma--cricketer-Virat-Kohli-tie-the-knot-in-Italy

தனது திருமண புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக விராட் கோலி வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இத்தாலி நாட்டின் மிலன் நகரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் திருமணம் நடந்து முடிந்ததாக ஃப்ளிம்ஃபேர் பத்திரிகை செய்து வெளிட்டிருந்தது. இந்தத் திருமண நிகழ்ச்சியில், மிக நெருங்கிய குடும்பத்தினரும், நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டதாகவும் அது குறிப்பிட்டிருந்தது. மேலும் இன்று இரவு 8:00 மணிக்கு விராட், அனுஷ்கா இருவரும் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்றும் ஃப்ளிம்ஃபேர் கூறியது.

கோலியும், அனுஷ்காவும் 2013 ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். விராட் கோலி வெளிநாடுகளுக்கு விளையாட செல்லும் போதெல்லாம் அனுஷ்காவை அழைத்துச் செல்வார். இந்தியாவிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டு வருகின்றனர். இடையில் 2015ஆம் ஆண்டு சிறிது காலம் பிரிந்து இருந்தாலும் மீண்டும் காதல் அவர்களை இணைத்தது. இந்நிலையில் இன்று அவர்கள் இருவரும் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் விராட் கோலி திருமண புகைப்படம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதில் விராட் கழுத்தில் அனுஷ்கா மாலையிடும் விளையாட்டு வைபவம் பதிவாகியுள்ளது. மேலும் விராட் தனது ட்விட்டில் “இன்று நாம் ஒருவருக்கு ஒருவர் அன்புடன் பிணைக்கப்படுவதாக வாக்குறுதி அளித்திருந்தோம். உங்களுடன் இந்த செய்தியை பகிர்ந்து கொள்ள நாங்கள் உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். எங்கள் குடும்பம் மற்றும் ரசிகர்களின் நல்வாழ்த்துகளால் அழகான இந்த நாள் சிறப்பானது. எங்கள் பயணத்தில் முக்கியமான அங்கமாக அமைந்த பலருக்கும் நன்றி” என்று விராட் குறிப்பிட்டுள்ளார்.


 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்