Published : 07,Dec 2017 02:43 AM

குஜராத்தில் முதல்கட்ட பிரசாரம் இன்று ஓய்கிறது!

Gujarat-polls-2017--Last-day-of-campaigning-today

குஜராத் மாநில சட்டப்பேரவை‌க்கான முதற்கட்ட தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. 

குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில், 89 தொகுதிகளுக்கு நாளை மறுதினம் முதற்கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்ட்ரா பகுதிகளை உள்ளடக்கிய அந்த 89 தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து தொள்‌ளாயிரத்து 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் முக்கியமாக, முதலமைச்சர் விஜய் ருபானி ராஜ்கோட் மேற்கு தொகுதியில் களம் காண்கிறார். 

தேர்தலையொட்டி கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தலைவர்களின் அனல் பறக்கும் பிரச்சாரத்தால் தெற்கு குஜராத் பகுதி களை கட்டியுள்ளது. இந்‌நிலையில் இன்று மாலையுடன் பரப்புரை ஓய்வதால், இறுதிகட்ட தேர்தல் பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரம்காட்டி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்