[X] Close

அடுத்த தீபாவளிக்குள் அயோத்தியில் ராமர் கோயில்: சு.சுவாமி தகவல்

Next-Diwali-will-be-celebrated-in-newly-built-Ram-Temple-in-Ayodhya--Swamy

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என்று பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

ராம ஜென்ம பூமி -பாபர் மசூதி வழக்கில் வரும் 5-ம் தேதியில் இருந்து தினமும் விசாரணை நடைபெற இருக்கிறது. இதை தொடர்ந்து தீர்ப்பு வெளியாக இருக்கிறது. இதற்கிடையே மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, அயோத்தியில் புதிதாகக் கட்டப்படும் ராமர் கோயிலில் அடுத்த தீபாவளியை பக்தர்கள் கொண்டாடலாம். அதற்கான அனைத்து வேலைகளும் தயாராகிவிட்டன. சுவாமி நாராயண் கோயிலைப் போல உள் கட்டமைப்புகளை பொருத்தினால் கோவில் தயாராகி விடும்’ என்றார்.

கோயில் கட்டுவதற்காக புதிய சட்டத்தைக் கொண்டு வர முடியும் என்றாலும் வழக்கில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் சொன்னார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close