கனமழை காரணமாக ஒரே நாளில் சேர்வலாறு அணை 27 அடியும், பாபநாசம் அணை 14 அடியும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி அருகே நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் இன்று காலை ஒகி புயலாக மாறியது. இதனால் கன்னியாகுமரி பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. போக்குவரத்தும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக ஒரே நாளில் சேர்வலாறு அணை நீர்மட்டம் 27 அடியும், பாபநாசம் அணை நீர்மட்டம் 14 அடியும் உயர்ந்துள்ளது. பாபநாசம் அணையின் மொத்த கொள்ளளவான 143 அடியில் நீர்மட்டம் 121.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் மொத்த கொள்ளளவான 156 அடியில் நீர்மட்டம் 148.62 அடியாக உள்ளது. இதேபோன்று நீர்மட்டம் உயர்வால் கொடுமுடியாறு அணையில், பாதுகாப்பு கருதி நம்பியாற்றில் 10,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே ஆற்றங்கரையோர மக்கள், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க மாவட்ட அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Loading More post
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்