Published : 29,Nov 2017 11:06 AM
தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் கன்னியாகுமரிக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை வடமேற்கு திசையில் நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறினார். தென்மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்த அவர், காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது புயலாக மாற வாய்ப்பில்லை என்று கூறினார்.