Published : 24,Nov 2017 04:51 PM
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
உலகத் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள சிந்து, காலிறுதியில் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள ஜப்பானின் அகானே யமாகுச்சி உடன் பலப்பரீட்சை நடத்தினார். முதல் செட்டை 21-12 என்ற கணக்கில் சிந்து எளிதில் கைப்பற்றினார். இரண்டாவது சுற்றின் தொடக்கத்தில் ஜப்பான் வீராங்கனை ஆதிக்கம் செலுத்தினார்.
எனினும் பின்னர் சமாளித்து விளையாடிய சிந்து அந்த செட்டை, 21-19 எனக் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதிப் போட்டியில் தாய்லாந்தின் ரட்சனாக் இன்டனானை எதிர்த்து சிந்து விளையாடவுள்ளார்.