துப்புரவுப் பணியாளர்கள் 3 பேர் அடுத்தடுத்து கொலை: திண்டுக்கல்லில் பதற்றம்

துப்புரவுப் பணியாளர்கள் 3 பேர் அடுத்தடுத்து கொலை: திண்டுக்கல்லில் பதற்றம்
துப்புரவுப் பணியாளர்கள் 3 பேர் அடுத்தடுத்து கொலை: திண்டுக்கல்லில் பதற்றம்

திண்டுக்கல்லில் வெவ்வேறு இடங்களில் 3 துப்புரவுப் பணியாளர்கள் அடுத்தடுத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் சோலைஹால் நெட்டு தெருவில் வசித்து வருபவர் பாலமுருகன், சரவணன், வீரன் என்ற வீரையா. இவர்கள் 3 பேரும் தனியார் நிறுவனம் ஒன்றில் துப்புரவுப் பணியாளர்களாக வேலை செய்து வருகின்றர். இன்று காலை வழக்கம்போல் துப்புரவுப் பணிக்கு 3 பேரும் சென்றுள்ளனர். பாலமுருகன் திண்டுக்கல் சிலுவத்தூர் சாலையில் உள்ள டீச்சாஸ் காலணியில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட மர்ம கும்பல், கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் பாலமுருகனை சரமரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே பாலமுருகன் உயிழந்தார்.

இதனையடுத்து பேருந்து நிலையிலம் அருகே உள்ள சவுராஷ்ட்ராபுரத்தில் துப்புரவு பணியிலிருந்த சரவணனை அதே கும்பல் வெட்டி சாய்த்தது. இதனையடுத்து நகால் நகர் ரயில் நிலையம் அருகே உள்ள பாவா லாட்ஜ் அருகே துப்புரவு பணியிலிருந்த வீரனையும் அதே கும்பல் வெட்டி சாய்த்தது. திண்டுக்கல்லில் இதுவரை இல்லாததுபோல் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பாணியில் இச்சம்பவம் நடைபெற்றிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த 3 துப்பரவு பணியாளார்களின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் முன்பகை காரணமாக 3பேரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com