Published : 23,Nov 2017 09:43 AM

மருத்துவ முதுநிலை மாணவர்களின் கோரிக்கையை அரசு ஏற்கும்: விஜயபாஸ்கர்

Government-will-accept-the-request-of-medical--students--Vijayapaskar

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ முதுநிலை மாணவர்களின் கோரிக்கையை விரைவில் அரசு ஏற்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனையில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று அரசு மருத்துவ முதுநிலை மாணவர்கள் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்ட நிகழ்வில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், போராட்டம் நடத்திய மாணவர்களது கோரிக்கைகளை அரசு ஏற்கும் என்று தெரிவித்தார். மேலும், மருத்துவ மாணவர்களின் நியமனம் குறித்து வரும் 21ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே வெளிப்படையான கலந்தாய்வு தேர்வு மூலமே தனியார் மற்றும் அரசு மருத்துவ மாணவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

அதேபோல், கலந்தாய்வு மூலமாக மருத்துவர்கள் இல்லை எனப் புகார்கள் வந்த இடங்கள் உள்பட பல பகுதிகளில் 586 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது போராட்டம் நடத்திய மாணவர்கள் படிப்பை நிறைவு செய்வதற்கு 9 மாதங்கள் உள்ள நிலையில் அதன் பின்பே கலந்தாய்வு மூலம் இடஓதுக்கீடு செய்ய முடியும் என்றும் 9 மாதங்கள் முன்பே இடத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்ற மாணவர்களின் கோரிக்கை ஏற்புடையதல்ல என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதேபோல் போராடும் மாணவர்களுக்கான சீனியாரிட்டி எந்த வகையிலும் பாதிக்காது என்றும், அவர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்கும் என்றும் அவர் கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்