[X] Close

மகனுடன் இணைந்து மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது

Father-sexual-harrasment-to-his-girl-child

பெற்ற பிள்ளைகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்து வந்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள காளிகுமாரபுரத்தை சேர்ந்தவர் ராஜன் - விஜி தம்பதி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். ஆண் குழந்தைதான் வீட்டிற்கு மூத்த பையன். பெண் குழந்தைகளில் ஒரு குழந்தை 7-ஆம் வகுப்பும் மற்றொரு குழந்தை 4-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்த இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை ராஜனும், சகோதரன் மணிகண்டனும் சேர்ந்து பல நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கின்றனர். ஒரு நாள் தற்செயலாக தாய் இந்த சம்பவத்தை நேரில் பார்த்து, துடிதுடித்து போனார். உடனே தனது இரண்டு பெண் குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டி நெல்லை குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் தேவ் ஆனந்திடம் புகார் அளித்தார். அந்த புகாரினை தொடர்ந்து நேரில் வந்த பாதுகாப்பு நல அலுவலர், இரண்டு பெண் குழந்தைகளையும் மீட்டார். மேலும் தந்தை ராஜன் மீதும் சகோதரன் மணிகண்டன் மீதும் உவரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரினை தொடர்ந்து உவரி போலீசார் தந்தை ராஜனை கைது செய்துள்ளனர்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close