திருவாரூர் அருகே பாசனக் கால்வாயில் எண்ணெய் கழிவுகள் கலந்துள்ளதால் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
கருப்பூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் அருகே உள்ள பாசன வாய்க்காலில் வெளியேற்றப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். அந்த பாசனக் கால்வாயை நம்பி 300 ஏக்கர் நிலங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், கால்வாய் முழுவதும் எண்ணெய் கழிவுகள் நிரம்பியிருப்பதால், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை இருப்பதாகக் கூறுகின்றனர். மேலும், அப்பகுதியிலுள்ள குளம் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் எண்ணெய் கழிவுகள் கலந்திருப்பதால் குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக வருந்துகின்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜிடம் கேட்டபோது, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அனுப்பி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
Loading More post
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்