
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் விவசாயிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முழக்கமிட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டிற்கான கரும்பு அரவையை மின்துறை அமைச்சர் தங்கமணி, தொழில்துறை அமைச்சர் சம்பத், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். எரிசாராய ஆலை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் அவர்கள் தொடங்கி வைத்தனர்.
அதன் பின்னர் ஆலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி பேசியபோது, அங்கிருந்த விவசாயிகள் சிலர் சர்க்கரை ஆலையில் முறைகேடு நடப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முழக்கமிட்ட 10 விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்புக்கு திமுகவின் சதியே காரணம் என அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.