இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 172 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நேற்று முன் தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி நண்பகலில்தான் தொடங்கியது. பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி, ரன் எடுக்க முடியாமல் தடுமாறியது. லக்மல் வீசிய முதல் பந்திலேயே லோகேஷ் ராகுல் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து தவான், கோலி ஆகியோரும் அவுட் ஆக, முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்தது.
இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று தொடர்ந்தது. இதில், ரஹானே, அஸ்வின் ஆகியோர் விக்கெட்டை இழந்தனர். இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால், இரண்டாவது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டது. முதல் நாளில் 12 ஓவர்களும், இரண்டாவது நாளில் 21 ஓவர்களும் மட்டுமே பந்துவீசப்பட்டன.
மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. நிலைத்து நின்று ஆடிய புஜாரா, 52 ரன்களிலும் சாஹா 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜடேஜா (29), புவனேஷ்வர் குமார்(13), ஷமி (24), உமேஷ் யாதவ் (6) ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இலங்கை அணி தரப்பில் லக்மல் 4 விக்கெட்டை வீழ்த்தினார். ஷனகா, காமேஜ், பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து இலங்கை அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
Loading More post
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
ரூ.1.44 லட்சம் கோடி! உச்சத்திற்கு அருகே ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல்! - முழுவிவரம்
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பு - என்ன காரணம்? ஏன் இந்த புதிய வரி? முழு விளக்கம்
இறக்குமதியை கட்டுப்படுத்த வரி அதிகரிப்பு - தங்கம் விலை உயரப்போகிறது?
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide