[X] Close

பைக் மீது டெம்போ மோதி விபத்து: பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு

school-student-dead-for-bike-accident

நாகர்கோவிலில் இரு சக்கர வாகனம் மீது மினி லாரி மோதிய விபத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


Advertisement

நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்த சத்தியஸ்ரீ எனும் 12-ஆம் வகுப்பு மாணவியை அவரது சகோதரர் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. பள்ளி அமைந்து இருக்கும் சாலையில் இருசக்கர வாகனம் வந்த போது, எதிரே பாரங்கல்லை ஏற்றிக்கொண்டு வந்த டெம்போ ஒன்று இரு சக்கர வாகனம் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் டெம்போவின் சக்கரத்தில் சிக்கிய மாணவி உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சகோதரர் காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார், சத்தியஸ்ரீயின் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close