Published : 16,Nov 2017 05:06 PM
பேரறிவாளனை விடுவிக்கலாம்: தீர்ப்பு அளித்த நீதிபதி கே.டி.தாமஸ்

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுவிக்கலாம் என அவருக்கு சிறைத் தண்டனை விதித்த நீதிபதி கே.டி.தாமஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்த புதிய தலைமுறைக்கு அவர் தொலைபேசி வாயிலாக அளித்த பிரத்யேக பேட்டியில், “29 ஆண்டுகள் ஒருவர் சிறையில் இருப்பது என்பது அதிக தண்டனையாகும். குற்றவாளிகள் தவறை உணரும் நேரத்தில் அதற்கான தீர்வு வழங்கப்பட வேண்டும். வளர்ச்சி பெற்ற நாட்டில் இப்படி ஒரு சூழல் இருக்கக் கூடாது” என்று கூறினார்.
மேலும், “பரோலில் வெளிவந்த அவரது நிலையை கண்டேன். இளம் வயது முழுவதையும் சிறையில் கழித்துள்ளார். குற்றத்திற்கான தண்டனையை விட அதிககாலம் சிறையில் இருந்துள்ளார். பேரறிவாளன் எழுதுவது, படிப்பது என முதிர்ச்சியை பெற்றுள்ளார். குற்றவாளி பேரறிவாளன் தனது வாழ்நாளின் மீதமுள்ள காலத்தை வெளியில் கழிக்க வேண்டும். அவர் மட்டுமல்ல மீதமுள்ளவர்களும் தான்” என்று கூறினார்.