Published : 16,Nov 2017 06:12 AM
வேலைக்காரன் ஃபேர்வெல் டே நாளை கொண்டாட்டம்

வேலைக்காரன் படத்தில் பணிபுரிந்தவர்களை கவுரவிக்கும் விதமாக நாளை (வெள்ளிக்கிழமை) வேலைக்காரன் ஃபேர்வெல் டே கொண்டாடப்படுகிறது.
தனி ஒருவன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் வேலைக்காரன் படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. மலையாள நடிகர் பகத் ஃபாஸில் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனால் திட்டமிட்டபடி டிசம்பரில் வேலைக்காரன் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வேலைக்காரனில் பணிபுரிந்தவர்களை கவுரவிக்கும் விதமாக நாளை (வெள்ளிக்கிழமை) வேலைக்காரன் ஃபேர்வெல் டே கொண்டாடப்படுகிறது. இந்த செய்தியை 24ஏஎம் ஸ்டூடியோஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.