[X] Close

பொருளாதார நெருக்கடியில் தமிழகம்: வைகோ

Tamilnadu-in-Economical-crises-Mdmk-Vaiko

தமிழகம் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நாட்டிலே காலாவதியான பேருந்துகளை இயக்குவதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாக மத்திய அரசின் 2015-16 அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், மற்ற மாநகரங்களைக் காட்டிலும் சென்னையில்தான் அதிகபட்சமாக 72 சதவீதம் பேருந்துகள் காலம் கடந்து இயக்கப்படுவதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு போக்குவரத்து கழகங்கள் இயங்கிவரும் நிலைமை குறித்து வெளியான தகவல் அதிர்ச்சி தருவதாக கூறியுள்ளார். மேலும், பொருளாதார நெருக்கடியில் தமிழகம் இருப்பதால் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close