[X] Close

விவேக் இடங்களில் சோதனை: ரூ1,200 கோடி முதலீடு! 8.5 கிலோ தங்கம் பறிமுதலா!

IT-Raid-at-Jaya-TV-CEO-Vivek-s-Places

ஜெயாடிவி சிஇஓ விவேக்கிற்கு சொந்தமான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், ரூ.1,200 கோடி மதிப்பிலான முதலீடுகள், 8.5 கிலோ தங்கம், ரூ.6 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
ஜெயா டிவி முதன்மை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் வீட்டில் 4வது நாளாக நடைபெற்ற சோதனையில், அவர் கவனித்து வரும் நிறுவனங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முடக்கப்பட்ட அந்த வங்கிக் கணக்குகள் 20க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்றும், அவற்றை விவேக் தான் நிர்வகித்து வந்தார் என்றும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


Advertisement

இது தொடர்பான முக்கிய ஆவணங்களையும் விவேக் வீட்டில் இருந்து பறிமுதல் செய்துள்ளதாகவும், ஒரு சில ஆவணங்கள் மட்டும் அவரது சகோதரி கிருஷ்ணப் பிரியா மற்றும் ஆடிட்டர் வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில், வெள்ளிக்கிழமை வரை மட்டும் ரூ.1,200 கோடி ரூபாய் மதிப்புள்ள கணக்கில் வராத முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள், 8.5 கிலோ தங்கம், ரூ.6 கோடி ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Advertisement

Advertisement
[X] Close