[X] Close

ஏற்கனவே நடந்த சோதனைகள் என்னவானது? திருநாவுக்கரசர் கேள்வி

Thirunavukkarasar-said-about-IT-Raid-in-Sasikala-relative-home

தமிழகத்தில் ஏற்கனவே நடத்தப்பட்ட சில வருமான வரி சோதனைகளின் முடிவுகள் என்னவானது? என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார். 


Advertisement

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக சசிகலா, டிடிவி தினகரனது உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 187 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனை, பெரும்பாலான இடங்களில் நிறைவடைந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சோதனைகளில் நூற்றுக்கணக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் இதுதொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுத்துள்ளது.


Advertisement

இந்நிலையில் வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள திருநாவுக்கரசர், தமிழகத்தில் ஏற்கனவே நடத்தப்பட்ட சில வருமான வரி சோதனைகள் என்ன ஆனாது என்றும், அதுதொடர்பாக மக்களுக்கு இதுவரை தகவல்கள் தெரிவிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் வருமான வரி சோதனைகளை மேற்கொள்வதும், பின்னர் எதுவுமே கூறால் மவுனமாக இருப்பதும் ஏன் என்றும் அவர் வினவியுள்ளார். வருமான வரித்துறையினரின் இதுபோன்ற சோதனைகள் வாடிக்கையாகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 


Advertisement

Advertisement
[X] Close