[X] Close

கன்னித்தீவு கதைதான் வருமானவரி சோதனை: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

MK-Stalin-reactions-for-Income-tax-raid

தினந்தந்தியில் வரும் கன்னித்தீவு கதை போல தமிழகத்தில் வருமானவரி சோதனை நீண்டு கொண்டு செல்வதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


Advertisement

சசிகலாவின் உறவினர் வீடுகள் உள்பட 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று நடைபெற்று வரும் வருமான வரித்துறையினர் சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், வருமான வரி சோதனை குறித்து பேச தன்னிடம் ஒரு பெரிய பட்டியலே உள்ளது என்றார்.  மேலும் பேசிய அவர், " விஜயபாஸ்கர், ராமமோகன் ராவ்,சேகர் ரெட்டி,முதலமைச்சர் பழனிசாமியின் உறவினரான ராமலிங்கம், தியாகராஜர் ஆகியோர் வீடுகளிலும் வருமான வரித்துறையினரின் சோதனைதான் நடைபெற்றது. இதில் என்ன நடவடிக்கைகள் எடுத்தார்கள்? அந்த அடிப்படையில்தான் இந்த ரெய்டும் நடக்கிறதா..? என்ற எண்ணம் வருகிறது. இதைப்பார்க்கும் போது தினத்தந்தியில் வரும் கன்னித்தீவு போலதான் வருமான வரித்துறையினரின் சோதனையும் தொடர்கிறது. வருமான வரித்துறைக்கு சம்பந்தமான அமைச்சரோ, அல்லது அதிகாரிகளோ இந்த சோதனை குறித்து விளக்கம் கொடுத்த பின், சசிகலாவின் உறவினர் வீடுகளில் நடைபெறும் சோதனை குறித்து நான் கருத்து தெரிவிக்கிறேன்" என்றார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close