[X] Close

30 வயதில் சிறைக்கு சென்றவன் நான்: டிடிவி தினகரன்

TTV-Dhinakaran-reactions-for-Income-tax-raid

30 வயதில் சிறைக்கு சென்றவன் நான் என்றும் அப்படியே சிறையில் அடைத்தாலும் வெளியே வந்து பதிலடி கொடுப்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


Advertisement

சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் உறவினர் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்தறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், " சென்னை அடையாறு இல்லத்திற்கு ஒருவர் மட்டும் வந்துவிட்டு திரும்பி சென்றுவிட்டார். இங்கு வருமான வரித்துறை சோதனை எதுவும் நடைபெறவில்லை. ஆனால், புதுச்சேரியில் உள்ள எனது பண்ணை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. சசிகலாவும் நானும் அரசியலில் இருக்கக்கூடாது என நினைத்து மிரட்டிப் பார்க்கவே திட்டமிட்டு ரெய்டு நடக்கிறது. வீரமிக்க மண்ணில் வீரமிக்க குடும்பத்தில் பிறந்தவர்கள் நாங்கள். எங்கள் வீட்டில் பிறந்தக் குழந்தை முதல் 80 வயது உள்ளவரை யாருக்கும் எந்தவித பயமும் கிடையாது. சிறு வயதில் இருந்தே எத்தனையோ மிரட்டல்களை பார்த்துவிட்டோம். 30 வயதில் சிறைக்கு சென்றவன் நான். சிறையில் அடைத்தாலும் பின்னர் வெளியே வந்து பதிலடி கொடுப்போம். ஜெ.ஜெ.டிவியை முடக்கியது போல ஜெயா டிவியையும் முடக்க முயற்சி நடைபெறுகிறது. கறுப்புப் பண ஒழிப்புக்காக மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை மிகப் பெரிய தோல்வி என நான் விமர்சித்ததால் இந்த சோதனை நடைபெறுகிறது. சோதனைக்குப் பின் மத்திய அரசு இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது" என அவர் தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close