நாட்டில் உள்ள பெண்களில் சரிபாதி பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச அளவிலான குளோபல் நியூட்ரிஷன் ரிப்போர்ட் 2017 எனும் ஆய்வு அறிக்கை இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. 140 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, இந்தியாவில் உள்ள பெண்களில் பாதிக்கும் அதிகமானோர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என தெரிக்கிறது. பதின்பருவ பெண்களில் 22 சதவிகிதம் பேர் உடல்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 38 சதவிகிதம் பேர் வயதுக்குரிய வளர்ச்சி இன்றி குள்ளமானவர்களாக இருப்பதாகவும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு போதிய ஊட்டச்சத்து இன்மையே காரணமாக கூறப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 21 சதவிகிதம் பேர் உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பதும் இந்த ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
பெண்களின் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு அவர்கள் ஆண்களுக்கு சமமாக நடத்தப்படாததும் ஒரு காரணம் என இந்த அறிக்கை தெரிவிக்கிறது. அனைத்து நாடுகளிலுமே உடல்பருமன் கொண்டவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'