Published : 08,Nov 2017 03:35 PM
கனமழை எதிரொலி: தேனியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

தேனி மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை கொட்டித்தீர்த்துள்ளதில், தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் சென்னை, திருவள்ளூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்கள் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, தேனி மாவட்டமும் பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை தேனி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி தெரிவித்துள்ளார்.