Published : 08,Nov 2017 11:36 AM

சீனியர் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்தை வீழ்த்திய பிரணாய் சாம்பியன்

Senior-National-Badminton-Championships-Men-s-Final--HS-Prannoy-stuns-World-No--2-Kidambi-Srikanth-to-lift-title

தேசிய சீனியர் பேட்மிண்டன் போட்டியில் முன்னணி வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்தை வீழ்த்தி பிரணாய் சாம்பியன் பட்டம் வென்றார்.

தேசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள பிரணாய், 2-வது இடத்தில் உள்ள கிடாம்பி ஸ்ரீகாந்த் மோதினர். முதல் சுற்றை பிரணாய் 21-15 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனையடுத்து இரண்டாவது சுற்றை கிடாம்பி 21-16 என்ற செட்டில்  கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது சுற்றில் பிரணாய் 21-7 என்ற கணக்கில் கிடாம்பியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்