Published : 01,Nov 2017 04:28 PM

வரும் முன் காப்போம்; நித்திரை கலைப்போம்: கமல்ஹாசன் ட்விட்

kamal-haasan-chennai-flood-reletaede-twit

வரும் முன் காப்போம்; நித்திரை கலைப்போம் என்று சென்னை மழைவெள்ளம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

மேலும் “இது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு. உடனே செயல்பட்டால் வரும் முன் காப்பதாகும். எனக்கு வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன.” என்று குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் ஒரு நீண்ட செய்தியை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் “சென்னையின் தென்மேற்கு வடமேற்குப் பகுதிகள் நீரில் மூழ்கத் தயாராக்கிக் கொண்டிருக்கின்றன. சேலையூர் ஏரி, கூடுவாஞ்சேரி, நந்திவரம், முடிச்சூர் ஏரிகள் நிரம்பி வழிய அதிக நேரமாகாது. நீர்நிலை ஆர்வலர்களுக்கோ மக்களுக்கோ இந்த ஏரிகளின் கொள்ளளவு தெரியாது. நீர் வரத்துப் பாதைகளும், நீர் வெளியேறும் பாதைகளும் தெரியாது. தெரியாது என்பதைவிட நில அபகரிப்புக்கு வசதியாய் தெரியாமல் வைக்கப்பட்டிருக்கிறது என்பதே கசந்து குமட்டும் உண்மை. 
நன்மங்கலத்திலிருந்து மற்றொரு ஏரிக்கு நீர் வரும் பாதையை மறித்துக் கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க நீதிமன்றம் 201லேயே உத்தரவு பிறப்பித்துவிட்டது. எனினும், இன்று வரை சட்டம் மீறப்படே வருகிறது. அப்பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்கவும் குரலெழுப்பவும் ஊடங்கள் தயவாய் உதவ வேண்டும். வரும் முன் காப்போம்; நித்திரை கலைப்போம்.”என கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்