விவசாயிகள் விவகாரத்தில் ஆமை வேகத்தில் செயல்படும் அதிமுக....மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

விவசாயிகள் விவகாரத்தில் ஆமை வேகத்தில் செயல்படும் அதிமுக....மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
விவசாயிகள் விவகாரத்தில் ஆமை வேகத்தில் செயல்படும் அதிமுக....மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

அண்டை மாநில அரசுகள் எல்லாம் அசுர வேகத்தில் செயல்பட்டு விவசாயிகளை பாதுகாக்கும் போது, அதிமுக அரசு மட்டும் ஆமை வேகத்தில் செயல்படுகிறது என எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புத்தாண்டு பிறந்தாலும் தமிழக விவசாயிகளுக்கு இன்னும் விடிவுகாலம் ஏற்படவில்லை. கருகிய பயிர்களைக் கண்ட அதிர்ச்சியில் ஏற்பட்ட மரணங்களும், தரிசாகிப் போன நிலங்களைப் பார்த்து நிகழும் தற்கொலைகளும் இன்னும் தொடர்கிறது. வேதனை தீயில் விவசாயிகளை தள்ளி விட்ட சாதனையைத்தான் அதிமுக செய்து காட்டியிருக்கிறது என்று விவசாயப் பெருமக்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.

தமிழகத்தை வறட்சி மாநிலமாக” அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்த தீர்மானம் நிறைவேற்ற, தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என முதலமைச்சர் பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தினேன். இந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தை முதலமைச்சர் உணர்ந்திருந்தாலும், அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத, ஏதோ ஒரு நெருக்கடியில் அவர் இருக்கிறார் என்பதை அந்த சந்திப்பில் என்னால் உணர முடிந்தது. அதிகாரத்தை திரைமறைவில் இருந்து வழிநடத்துபவர்களின் அலட்சியத்தால், நாட்டின் அச்சாணியாகத் திகழும் விவசாயிகளின் வாழ்வு பாலைவனமாகி விடக்கூடாது. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற முடியாததாலும், பருவமழை பொய்த்ததாலும், அரசின் நிவாரண உதவிகள் கிடைக்காததாலும், அனைத்துத் தரப்பு விவசாயிகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். விவசாயிகள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனத் திமுக உள்பட எதிர் கட்சிகள் அனைத்தும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com