சென்னை வியாசர்பாடியில் உள்ள ஜீவா சுரங்கப்பாதையில் பல அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவும் மழை கொட்டித் தீர்த்தது. கடந்தாண்டு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் இந்தாண்டு சென்னை உள்பட பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் மக்கள் மனதளவில் மகிழ்ச்சி அடைந்தாலும், இயல்பு வாழ்க்கையில் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் போல் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலும் பல இடங்களில் ஏற்பட்டுள்ளது.
இதுதவிர பல தெருக்களிலும் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது. இதனால் வீட்டை விட்டே பொதுமக்கள் வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர். சென்னை கொரட்டூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர். இதனிடையே, சென்னை வியாசர்பாடியில் உள்ள ஜீவா சுரங்கப்பாதையில் பல அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது. மேலும், சுரங்கப்பாதையில் மாநகரப் பேருந்து ஒன்றும் சிக்கியது. பின்னர் அந்த பேருந்து மீட்கப்பட்டது. ஆண்டுதோறும் இந்த இடத்தில் மழை நீர் தேங்குவதாக கூறும் பொதுமக்கள் ஆனால் மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் முன்வருவதில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி