Published : 30,Oct 2017 12:54 PM
7 ஆண்டுகளாக திறக்கப்படாத சமுதாய நலக்கூடம்: பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கட்டி முடிக்கப்பட்டு 7 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள சமுதாய நலக்கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் தென்காசி பிரதான சாலையில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணி முந்தைய திமுக ஆட்சிகாலத்தில் துவங்கப்பட்டது. 30 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கட்டடம் கடந்த 7 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த கட்டடத்தில் குப்பை கூளங்கள் நிறைவதுடன், கட்டடம் பாழாகும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. இங்கு வாழும் பொதுமக்கள் விழாக்களை நடத்த இடமில்லாமல் தவிப்பதாக கவலையுடன் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கட்டடத்தில் கழிப்பறை, சமையலறை வசதிகள் இல்லாமல் இருப்பதால் அவற்றை நிறைவு செய்து சமுதாய நலக்கூடத்தை விரைவில் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்று அரசாங்கத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.