Published : 26,Oct 2017 01:34 PM
குடிபோதையில் காரின் மீது எறி ரகளையில் ஈடுபட்ட அரசு அதிகாரி

தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடியில், அரசு அதிகாரி ஒருவர் குடிபோதையில் ரகளை செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைக்கு இடையில் உள்ளது பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி. இங்கு குடிபோதையில் வந்த அரசு அதிகாரி ஒருவர், கார் மீது ஏறி ரகளையில் ஈடுபட்டார். அந்த அதிகாரி வந்த காரில் ’தமிழ்நாடு அரசு’ என எழுதப்பட்டிருந்தது. அந்தக் கார் ஓட்டுனரிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் பேசிக் கொண்டிருந்த போது காரிலிருந்து வெளியே வந்த அந்த நபர், கோ ஆப்ரேடிவ் அதிகாரி எனக்கூறி ஊழியர்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் கார் மீது ஏறி அமர்வது, பின் சிலர் அவரை வீடியோ எடுப்பதை பார்த்து கீழே இறங்கி, அங்கிருந்து வேகமாக புறப்பட்டு செல்வது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.