ஒரு கருத்துக்கு எதிர் கருத்து கூறியதால், குடும்பத்தினருடன் கூட பேச முடியாத வார்த்தைகளால் தொலைபேசி வழியே தொடர்ந்து திட்டுவதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எதிர்கருத்து கூறினால் இதுதான் நிலையா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “ஒரு கருத்துக்கு எதிர் கருத்து தான் கூறியிருந்தேன். அவர்கள் கூறும் கருத்து எல்லாம் சரி. எதிர் கருத்து கூறினால் தவறு என நினைக்கிறார்கள். அது எப்படி சரியாக இருக்கும்? எதிர் கருத்து கூறியதற்காக, தொடர்ந்து தொலைபேசி மூலம் மிக மோசமான வார்த்தைகளால் தோழியிடமோ, தாயிடமோ, தங்கையிடமோ கூட பேச முடியாத வார்த்தையால் திட்டி வருகின்றனர். தமிழகத்தில் எதிர்கருத்து பேசினால் இதுதான் நிலையா?” என்று கேள்வி எழுப்பினார்.
மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் திட்டங்களை விமர்சித்து இடம் பெற்றுள்ள வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம், நடிகர் விஜயை தங்கள் பக்கம் இழுக்க பாரதிய ஜனதா முயற்சிப்பதாக திருமாவளவன் விமர்சித்திருந்தார். அதற்கு பதில் அளித்த தமிழிசை சவந்தரராஜன், திருமாவளவன்தான் அதுபோன்ற கட்டப் பஞ்சாயத்துகளை செய்வதாக கூறியிருந்தார். இதன்தொடர்ச்சியாக கரூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது பாஜகவினருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
Loading More post
இழந்து விடக்கூடாதது ஒன்றே ஒன்றுதான்! - #MorningMotivation #Inspiration
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix