பிரபல திரைப்பட இயக்குனர் ஐ.வி.சசி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 69.
1970 மற்றும் 80-களில் பிரபலமாக இருந்தவர் மலையாள இயக்குனர் ஐ.வி.சசி. இவர்,
தமிழில், கமல், ரஜினி இணைந்து நடித்த ’அலாவுதீனும் அற்புத விளக்கும்’, விஜயகுமார், ஸ்ரீதேவி நடித்த, ’பகலில் ஒரு இரவு’, கமல்ஹாசன் நடித்த குரு, ரஜினிகாந்த் நடித்த ’எல்லாம் உன் கைராசி’, காளி, ஜெயராம் நடித்த ’கோலங்கள்’ உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் தனது படங்களில் ஹீரோயினாக நடித்த சீமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சசி, இயக்கிய 30 படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் சீமா. மலையாளம், இந்தி உட்பட சுமார் 150 படங்களை இயக்கியுள்ளார் ஐ.வி.சசி. சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த இவர், கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்தார். இன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு ஏராளமான திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த இயக்குனர் ஐ.வி. சசிக்கு அனு என்ற மகளும் அனி என்ற மகனும் உள்ளனர்.
Loading More post
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
வடிகால்களை தூர்வாராமல் டெல்லியை மூழ்கடிக்க பாஜக விரும்புகிறதா? - ஆம் ஆத்மி
'பெண் தொகுப்பாளர்கள் கட்டாயம் முகத்தை மூடியிருக்க வேண்டும்'- ஆப்கனில் புது உத்தரவு அமல்
சூறைக்காற்றால் குளிரும் டெல்லி! விமான சேவைகள் பாதிப்பு
'மதரஸா' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது - முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை