சாமி 2ல் இருந்து நடிகை த்ரிஷா விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
விக்ரம் நடிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் 2003ல் வெளியான படம் சாமி. அதில் முரட்டு போலீஸ்காரராக விக்ரம் நடித்திருந்தார். அவரது ஆறுச்சாமி கதாப்பத்திரம் அதிகம் ரசிக்கப்பட்டது. அதேபோல் தயிர் சாதமாக நடித்திருந்த த்ரிஷாவின் கதாப்பாதிரமும் அதிகம் பேசப்பட்டது. இதன் மாபெரும் வெற்றியை மனதில் வைத்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முடிவில் சில வருடங்களுக்கு முன் ஹரி இறங்கினார். ஆனால் விக்ரம் தனது உடல் அமைப்பை மீட்டுக் கொண்டுவர அவருக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது.
பல வருடங்களாக தாமதமாகி வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஏற்காட்டில் தொடங்கியது. அப்படத்தில் புது வரவாக கீர்த்தி சுரேஷ் உள்ளே வந்தார். அவர் விக்ரமுடன் ஹெலிகாப்ட்டரில் பங்குபெறும் சண்டைக்காட்சி பரபரப்பாக எடுக்கப்பட்டது. இந்த 2ம் பாகத்தில் கீர்த்தியின் கதாபாத்திரம் கனமானது என பேச்சுக்கள் வலம் வந்தன. இரண்டாம் பகுதியில் மட்டுமே த்ரிஷா திரையில் தோன்றுகிறார். கதைப்படி அவர் ப்ளாஷ்பேக் நாயகி மட்டுமே என்றும் தகவல் வெளியானது.
இந்தநிலையில் த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் “கிரியேட்டிவ் வேறுபாடுகள் காரணமாக சாமி 2ல் இருந்து நான் விலகிக் கொள்வதாக முடிவு செய்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
ஜம்முவில் ஏ47 துப்பாக்கியுடன் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகியாக இருந்தவர்-பரபரப்பு தகவல்
”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” - ஆ.ராசா!
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
தோனி மீது இவ்வளவு சர்ச்சைகளா?.. களத்தில் நிகழ்ந்த டாப் 5 தரமான சம்பவங்கள்!
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?