[X] Close

விராத் கோலிக்கு ஓய்வா? தேர்வுக் குழு இன்று முடிவு

Will-Virat-get-a-well-deserved-rest-

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வளிக்கப்படும் என்று தெரிகிறது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. இதில் இந்திய அணி தோல்விடைந்தது. ஒரு நாள் போட்டிகளுக்குப் பிறகு டி 20 தொடர், நவம்பர் 1-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான வீரர்கள் தேர்வு இன்று நடக்கிறது. இதில், இந்திய கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வளிக்கப்படாலம் எனக் கூறப்படுகிறது. 

இந்திய கிரிக்கெட் அணி, தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வருகிறது. தோள்பட்டை காயம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த விராத் கோலி, அதற்கடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறார். சாம்பியன்ஸ் கோப்பையை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் தொடர், இலங்கை தொடர், ஆஸ்திரேலிய அணியுடனான போட்டி, இப்போது நியூசிலாந்து அணியுடனான தொடர் என விளையாடி வருகிறது. இதற்காக வீரர்கள் சுழற்சி முறையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். ஆனால், விராத் கோலி மட்டும் தவிர்க்க முடியாத வீரராகத் தொடர்ந்து விளையாடி வருகிறார். 


Advertisement

இதன் காரணமாக, நவம்பர் 16-ம் தேதி தொடங்கும் இலங்கை டெஸ்ட் தொடரில் அவருக்கு ஓய்வளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அடுத்து தென்னாப்பிரிக்கா தொடர் இருப்பதைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வளிக்க முடிவெடுக்கப்படும் என்றும் அவருக்கு பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரம் இலங்கை ஒரு நாள் போட்டி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஒரு நாள் போட்டிகளில் சேர்க்கப்படாமல் இருக்கும் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இலங்கை டெஸ்ட் போட்டிகளுக்காக சேர்க்கப்படுவார்கள். 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close