[X] Close

சச்சினுக்கு அடுத்து கோலி: செஞ்சுரி சாதனை

Virat-kohli-s-century-record

ஒரு நாள் கிரிக்கெட்டில் 31 சதம் அடித்து இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி சாதனை படைத்தார்.


Advertisement

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி மும்பையில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்திய அணியின் கேப்டன் விராத் கோலிக்கு இது 200-வது போட்டி. இதில் அவர் சதமடித்தார். 
இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில், விராத் கோலி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.  375 போட்டிகளில் 30 சதங்கள் அடித்திருந்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை, தமது 200-வது போட்டியில் கோலி முறியடித்தார். இந்தப்பட்டியலில் 49 சதங்களுடன் சச்சின் முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் கோலி உள்ளார். 


Advertisement

Advertisement
[X] Close