[X] Close

விஜய், அட்லியோடு இணைந்து 'மெர்சல்' பார்த்த கமல்ஹாசன்

Kamal-watched-Mersal-with-Vijay-and-Atlee

பல்வேறு சர்ச்சைகளுக்குள்ளான மெர்சல் திரைப்படத்தை, விஜய், அட்லியோடு இணைந்து நடிகர் கமல்ஹாசன் பார்த்தார்.

அரசியல் கருத்துக்கள் பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்து வரும் நடிகர் கமல்ஹாசன், மெர்சலுக்கு சான்று வழங்கப்பட்டுள்ளது என்றும், அதை மறுபடியும் சென்சார் செய்ய வேண்டாம் என்றும் கூறியிருந்தார். அத்துடன் விமர்சனங்களை தர்க்க ரீதியில் எதிர்கொள்வோம் என்றும், விமர்சகர்களை மெளனமாக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தார். மேலும், பேசும்போதுதான் இந்தியா எதிர் வரும் நாளில் பிரகாசிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து மெர்சல் திரைப்படத்திற்கு தமிழக பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் இல்லத்தில் மெர்சல் திரைப்படம் திரையிடப்பட்டது. அதனை விஜய், அட்லி மற்றும் படக்குழுவினரோடு இணைந்து கமல்ஹாசன் கண்டுகளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close