
டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் விதமாக, தண்ணீர் தேங்கியுள்ள பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு கொசுக்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்த அவர்கள், பள்ளி நிர்வாகத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். கொசுக்கள் பரவும் வகையில் பள்ளிகள் பராமரிக்கப்படாமல் இருந்தால், பெற்றோர்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு புகார் அளிக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நந்தம்பாக்கத்தில் தனியார் பள்ளி வளாகம் டெங்கு கொசு உற்பத்தியாவதற்கான ஏற்ற சுகாதாரமற்ற சூழல் நிலவுவதாக, அடிக்கடி வந்த புகாரின் அடிப்படையில், பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி ஆய்வு செய்தார்.